மலேசியா, சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த விமானங்கள் தாமதம்; பயணிகள் பெரும் அவதி
மலேசியா, சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த விமானங்கள் தாமதம் ஆனதால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்
செம்பட்டு,
மலேசியா, சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த விமானங்கள் தாமதம் ஆனதால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்
விமானங்கள் தாமதம்
திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு 9.10 மணிக்கு திருச்சிக்கு வர வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 7 மணி நேரம் தாமதமாக நேற்று காலை 4.10 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது.
இதேபோல் சிங்கப்பூரில் இருந்து இரவு 9.05 மணிக்கு திருச்சிக்கு வந்தடைய வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சுமார் 11 மணி நேரம் தாமதமாக நேற்று காலை 8.40 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. இதனால் இந்த விமானங்களில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பெரும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இதற்கு தொழில்நுட்ப காரணங்களால் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story