தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை


தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 2 Jun 2021 12:15 AM IST (Updated: 2 Jun 2021 12:15 AM IST)
t-max-icont-min-icon

காதலனுடன் மகள் வீட்டை விட்டு ஓடியதால் மனமுடைந்த தம்பதி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராமநகர் அருகே சென்னப்பட்டணாவில் நடந்துள்ளது.

ராமநகர்:

காதலனுடன் மகள் வீட்டை விட்டு ஓடியதால் மனமுடைந்த தம்பதி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராமநகர் அருகே சென்னப்பட்டணாவில் நடந்துள்ளது.

வீட்டை விட்டு ஓடிய மகள்

ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா தாலுகா எச்.பேடரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50). இவரது மனைவி சைலஜா (42). இந்த தம்பதியின் மகள் ஷில்பா. ரமேஷ் விவசாயம் செய்து வந்தார். 

இந்த நிலையில், ஷில்பாவும், அதே கிராமத்தை சேர்ந்த புனித் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் ரமேசுக்கு தெரியவந்தது.


உடனே அவர், தனது மகளை கண்டித்துள்ளார். மேலும் புனித்துடன் உண்டான காதலை கைவிடும்படி தனது மகளிடம் ரமேஷ் கூறியுள்ளார். ஆனால் காதலை கைவிட ஷில்பா மறுத்து விட்டார். 

கடந்த மாதம் (மே) 30-ந் தேதி புனித்துடன் ஷில்பா வீட்டை விட்டு ஓடிப்போய் விட்டார். தனது மகள் காதலுடன் ஓடிப்போனதால் ரமேசும், சைலஜாவும் மனம் உடைந்து போய் விட்டனர்.

தம்பதி தற்கொலை

இதற்கிடையில், திருமணம் செய்து கொண்டனர். இதுபற்றி   ரமேசுக்கு தெரியவந்தது. உடனே ரமேசும், அவரது மனைவியும் தெங்கினஹள்ளி கிராமத்தில் உள்ள தோட்டத்திற்கு புறப்பட்டு சென்று விட்டார்கள். இந்த நிலையில், நேற்று காலையில் தோட்டத்தில் உள்ள மா மரத்தில் ரமேசும், அவரது மனைவி சைலஜாவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். 

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் சென்னப்பட்டணா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து தம்பதியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். 

அப்போது மகள், வீட்டை விட்டு ஓடிப்போய் வாலிபரை திருமணம் செய்து கொண்டதால், மனமுடைந்த ரமேசும், அவரது மனைவியும் தற்கொலை செய்தது தெரியவந்தது. 

இதுகுறித்து சென்னப்பட்டணா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story