ஒரு கிலோ கஞ்சாவுடன் பெண் கைது


ஒரு கிலோ கஞ்சாவுடன் பெண் கைது
x
தினத்தந்தி 2 Jun 2021 12:15 AM IST (Updated: 2 Jun 2021 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஒரு கிலோ கஞ்சாவுடன் பெண் கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,ஜூன்
ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் பாபு ஸ்ரீவில்லிபுத்தூர் போக்குவரத்துக்கழக பணிமனை பின்புறம் உள்ள பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராக்கு என்ற பெண் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தார்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் விற்பனைக்காக ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த சப்-இன்ஸ்பெக்டர் பாபு கஞ்சாவை பறிமுதல் செய்தார்.

Next Story