கர்நாடகத்தில் புதிதாக 14,304 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 14,304 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 2 Jun 2021 12:20 AM IST (Updated: 2 Jun 2021 12:20 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் புதிதாக 14,304 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 464 பேர் பலியானதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் புதிதாக 14,304 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 464 பேர் பலியானதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மொத்த எண்ணிக்கை

கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 16 ஆயிரத்து 224 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 14,304 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 18 ஆயிரத்து 735 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 464 பேர் உயிரிழந்தனர்.

இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 554 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 29,271 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். 

இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்து 90 ஆயிரத்து 861 ஆக அதிகரித்துள்ளது. 

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 98 ஆயிரத்து 299 ஆக குறைந்துள்ளது. பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 3,418 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோலாரில் 338 பேர்

பாகல்கோட்டையில் 217 பேர், பல்லாரியில் 399 பேர், பெலகாவியில் 891 பேர், பெங்களூரு புறநகரில் 202 பேர், பீதரில் 22 பேர், சாம்ராஜ்நகரில் 80 பேர், சிக்பள்ளாப்பூரில் 152 பேர், சிக்கமகளூருவில் 504 பேர், சித்ரதுர்காவில் 637 பேர், தட்சிண கன்னடாவில் 536 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தாவணகெரேயில் 178 பேர், தார்வாரில் 267 பேர், கதக்கில் 214 பேர், ஹாசனில் 1,127 பேர், ஹாவேரியில் 219 பேர், கலபுரகியில் 82 பேர், குடகில் 162 பேர், கோலாரில் 338 பேர், கொப்பலில் 272 பேர், மண்டியாவில் 337 பேர், மைசூருவில் 1,151 பேர், ராய்ச்சூரில் 133 பேர்,

 ராமநகரில் 138 பேர், சிவமொக்காவில் 520 பேர், துமகூருவில் 769 பேர், உடுப்பியில் 735 பேர், உத்தரகன்னடாவில் 332 பேர், விஜயாப்புராவில் 163 பேர், யாதகிரியில் 107 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இறப்பு இல்லை

கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 276 பேரும், பல்லாரியில் 14 பேரும், பெலகாவியில் 19 பேரும், பெங்களூரு புறநகரில் 11 பேரும், பீதரில் 2 பேரும், சாம்ராஜ்நகரில் 3 பேரும், சிக்பள்ளாப்பூரில் 5 பேரும், சிக்கமகளூருவில் 2 பேரும், சித்ரதுர்காவில் 7 பேரும், தட்சிண கன்னடாவில் 5 பேரும்,

 தாவணகெரேயில் 5 பேரும், தார்வாரில் 9 பேரும், கதக்கில் 4 பேரும் இறந்தனர்.
ஹாசனில் 11 பேரும், ஹாவேரியில் 6 பேரும், கலபுரகியில் 7 பேரும், குடகில் 4 பேரும், கோலாரில் 3 பேரும், 

கொப்பலில் 8 பேரும், மண்டியாவில் 3 பேரும், மைசூருவில் 15 பேரும், ராய்ச்சூரில் 3 பேரும், 

ராமநகரில் 3 பேரும், சிவமொக்காவில் 13 பேரும், துமகூருவில் 9 பேரும், உடுப்பியில் 3 பேரும், உத்தரகன்னடாவில் 8 பேரும், விஜயாப்புராவில் 6 பேரும் உயிரிழந்தனர். பாகல்கோட்டை, யாதகிரியில் இறப்பு இல்லை.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பரவல் விகிதம் குறைந்தது

கர்நாடகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், உயிரிழப்பு மட்டும் குறையவில்லை. தினசரி 400-க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகத்தில் கொரோனா பரவல் விகிதம் 12.30 சதவீதமாக குறைந்துள்ளது.

Next Story