ரூ 22 லட்சம் வாடகை பாக்கி பிரபல ஜவுளி கடைக்கு சீல்
ரூ.22 லட்சம் வாடகை பாக்கி செலுத்தாததால் பொள்ளாச்சியில் பிரபல ஜவுளி கடைக்கு நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
பொள்ளாச்சி
ரூ.22 லட்சம் வாடகை பாக்கி செலுத்தாததால் பொள்ளாச்சியில் பிரபல ஜவுளி கடைக்கு நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
ஜவுளி கடை
பொள்ளாச்சி நகராட்சி மூலம் தொழில்வரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம், குத்தகை இனங்கள், வாடகை மற்றும் காலியிட வரி உள்ளிட்ட வரி இனங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பொள்ளாச்சி மெட்ராஸ் ரோடு சந்திப்பில் பழைய நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் அன்பு சில்க்ஸ் என்ற பெயரில் பிரபல ஜவுளி கடை செயல்பட்டு வருகிறது.
இந்த கடைக்கு மாத வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு நகராட்சி மூலம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
அதிகாரிகள் சீல் வைத்தனர்
இதற்கிடையில் கடந்த ஒரு ஆண்டாக இந்த ஜவுளிக்கடை சார்பில் நகராட்சிக்கு வாடகை பணம் செலுத்தவில்லை. எனவே அந்த கடைக்கு சீல் வைக்க நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உத்தர விட்டார்.
இதையடுத்து நகராட்சி வருவாய் அதிகாரி வெங்கடேஷ் வரன் தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்றனர். பின்னர் அவர்கள் அந்த ஜவுளிக்கடைக்கு சீல் வைத்தனர்.
அப்போது நகரமைப்பு ஆய்வாளர் உதயகுமார், சந்தை கண்காணிப்பாளர் அரிகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் உடன் இருந்தனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
ரூ.22 லட்சம் வாடகை
பொள்ளாச்சி நகராட்சிக்கு சொந்தமான பழைய பள்ளி கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அன்பு சில்க்ஸ் என்ற ஜவுளிக்கடை கடந்த ஒரு ஆண்டாக வாடகை பணம் ரூ.22 லட்சம் செலுத்தாமல் நிலுவையில் உள்ளது.
இந்த தொகையை செலுத்த கோரி பலமுறை நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். அதன் பிறகும் வாடகை பணம் செலுத்தவில்லை. எனவே ஜவுளி கடைக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று அந்த கடையின் பின்புறம் செல்லும் வழியும் பூட்டி சீல் வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story