இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்தவர்களை நடுரோட்டில் நிற்க வைத்த போலீசார்
சிங்கம்புணரியில் இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்தவர்களை நடுரோட்டில் நிற்க வைத்து போலீசார் எச்சரித்தனர்.
சிங்கம்புணரி,
இருப்பினும் ஒரு சிலர் ஏதாவது காரணம் கூறி தேவையின்றி ஊர் சுற்றி வருகிறார்கள். போலீசாரும் பலமுறை எச்சரித்து விட்டனர். இந்த நிலையில் நேற்று காலை 4 ரோடு பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக தேவையின்றி இருசக்கர வாகனங்களில் வந்த 50 பேர் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் ஒரு மணி நேரம் நடுரோட்டில் நிற்க வைக்கப்பட்டனர். அதன்பிறகு சப்-இன்ஸ்பெக்டர் அவர்களிடம், கொரோனா பெருந்தொற்று பரவுவதை தடுப்பதற்காக அரசு முழு ஊரடங்கு அறிவித்து உள்ளது. உங்கள் குடும்பத்துக்காக நாங்கள் எங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து பணியாற்றி வருகிறோம். கொரோனா தொற்று உங்கள் மூலம் குடும்பத்தாருக்கு போய் விட கூடாது என்பதற்காக தான் வெளியே சுற்றாதீர்கள் என எச்சரிக்கிறோம். அரசுக்கு நீங்கள் ஒத்துைழப்பு கொடுங்கள். கொரோனாவில் இருந்து வெல்வோம். மீண்டும் இது போல வெளியே சுற்றித்திரிந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்தார். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
Related Tags :
Next Story