15-வது மாடியில் இருந்து குதித்து தனியார் நிறுவன அதிகாரி தற்கொலை


15-வது மாடியில் இருந்து குதித்து தனியார் நிறுவன அதிகாரி தற்கொலை
x
தினத்தந்தி 2 Jun 2021 12:32 AM IST (Updated: 2 Jun 2021 12:32 AM IST)
t-max-icont-min-icon

15-வது மாடியில் இருந்து குதித்து தனியார் நிறுவன அதிகாரி தற்கொலை

பெங்களூரு:

பெங்களூரு நகரில் வசித்து வந்தவர் விவேக் மதுசூதன். இவர், தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். விவேக் தனது மனைவியுடன் வாழ பிடிக்காமல் பிரிந்து வாழ்ந்து வந்தார். மேலும் மனைவியிடம் இருந்து கோர்ட்டு மூலம் விவகாரத்தும் அவர் பெற்றிருந்தார்.

 இந்த நிலையில், விவேக் புதிதாக வீடு வாங்க முடிவு செய்திருந்தார். இதையடுத்து, விவேக்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குவதற்கு விவேக் தீர்மானித்திருந்தார். 

நேற்று காலையில் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று அவர் வீட்டை பார்வையிட்டார். அடுக்குமாடி குடியிருப்பின் 15-வது மாடியில் நின்று கொண்டிருந்த போது திடீரென்று விவேக் கீழே குதித்தார். 

இதில், அவர் தலையில் பலத்தகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். அவர் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்தார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து விவேக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story