மாவட்ட செய்திகள்

ஆனைமலை தாலுகாவில் பாதிப்பு அதிகரிப்பு 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் + "||" + Corona treatment center with 100 bed facilities

ஆனைமலை தாலுகாவில் பாதிப்பு அதிகரிப்பு 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம்

ஆனைமலை தாலுகாவில் பாதிப்பு அதிகரிப்பு 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம்
ஆனைமலை தாலுகாவில் பாதிப்பு அதிகரிப்பு 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம்
பொள்ளாச்சி

ஆனைமலை தாலுகா பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே ஆனைமலை தாலுகா பகுதியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 

அதன்படி நா.மூ.சுங்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தை தாசில்தார் விஜயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது அவர் நோயாளிகளுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது தேர்தல் பிரிவு மண்டல தாசில்தார் வாசுதேவன், கோட்டூர் வருவாய் ஆய்வாளர் சுந்தர்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். 

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:- 

ஆனைமலை ஒன்றிய பகுதிகளில் கொரோனா 2-வது அலையில் இது வரை 1,571 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் 808 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 

இந்த நிலையில் தாலுகா பகுதிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப் படும் நபர்களுக்கு ஸ்கேன், எக்ஸ்-ரே பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

  இதில் எந்த தொந்தரவு இல்லாதவர்களுக்கு சிகிச்சை அளிக்க நா.மூ.சுங்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 100 படுக்கை வசதி களுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

 அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படும். இந்த மையத்தில் டாக்டர், செவிலியர் ஒருவர் பணி அமர்த்தப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். 

சிகிச்சை முடிந்ததும் மீண்டும் பரிசோதனை செய்யப்படும். அதில் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றால் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

 ஸ்கேன் பரிசோதனையில் தொந்தரவு இருந்தால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. கரூர் காகிதஆலையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை கலெக்டர் நேரில் ஆய்வு
கரூர் காகிதஆலையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, குறைகளை கேட்டறிந்தார்.
2. காணொலி மூலம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
விருதுநகரில் 200 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தினை மு.க. ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
3. பெருந்துறை கொரோனா சிறப்பு மையத்துக்கு 14 மணி நேரத்தில் மின்சார இணைப்பு- அதிகாரிகளுக்கு பாராட்டு
பெருந்துறை கொரோனா சிறப்பு மையத்துக்கு 14 மணி நேரத்தில் மின்சார இணைப்பு வழங்கிய அதிகாரிகளுக்கு பலர் பாராட்டு தெரிவித்தனர்.
4. நம்பியூரில் கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு தனி சிகிச்சை மையம்- அமைச்சர் சு.முத்துசாமி திறந்துவைத்தார்
நம்பியூரில் கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு தனி சிகிச்சை மையத்தை அமைச்சர் சு.முத்துசாமி திறந்துவைத்தார்.
5. கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.பள்ளியில் 860 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம்
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளியில் 860 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணியை கலெக்டர் கிரண்குராலா ஆய்வு செய்தார்.