கருப்பு பூஞ்சை தொற்றுக்கு ஒருவர் பலி
கருப்பு பூஞ்சை தொற்றுக்கு ஒருவர் பலியானார்.யானார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் மியூகோர்மைகோசிஸ் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு குறித்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகள் மற்றும் தொற்றில் இருந்து சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பியுள்ள நோயாளிகளை தீவிரமாக விசாரித்து அவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று உள்ளதா என்று கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மற்றும் பரமக்குடி ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கு கருப்பு பூஞ்சை தொற்று அறிகுறி இருப்பதாக தகவல் தெரியவந்தது. மருத்துவ குழுவினர் மேற்கண்ட இருவரையும் பரிசோதனை செய்ததில் கருப்பு பூஞ்சை தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் மேற்கண்ட 2 பேரும் தொடர் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இவர்கள் தவிர வேறு யாருக்கும் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட வில்லை. இந்த தகவலை ராமநாதபுரம் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் பொற்கொடி தெரிவித்தார். இந்நிலையில் கீழக்கரை பகுதியை சேர்ந்த ஒருவர் கருப்பு பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பலியாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story