கழிவுநீர் வாருகால் அடைப்பால் நோய் பரவும் அபாயம்
கழிவுநீர் வாருகால் அடைப்பால் நோய் பரவும் அபாயம்
தளவாய்புரம்,ஜூன்
சேத்தூர் பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள வளையர் புதுத் தெரு, வடக்குத்தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் கடந்த சில மாதங்களாக கழிவுநீர் வாருகாலில் ஏற்பட்ட அடைப்புகளை சரி செய்யவில்லை. இதனால் கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. அந்த வழியாக செல்வோர் கழிவுநீரை தாண்டி செல்ல மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
இதன் காரணமாக பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இது பற்றி சேத்தூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் சேத்தூர் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் கழிவுநீர் வாருகாலில் ஏற்படும் அடைப்புகளை வாரம்தோறும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story