கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அதிகாலையிலேயே திரண்ட பொதுமக்கள்


கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அதிகாலையிலேயே திரண்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 2 Jun 2021 2:01 AM IST (Updated: 2 Jun 2021 2:01 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அதிகாலையிலேயே பொதுமக்கள் திரண்டனர்

கரூர்
 கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். இதனால் கொரோனா தடுப்பூசி விரைவாக தீர்ந்து போயின. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது கரூர் மாவட்டத்தில் 500 பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் அளவுக்கு மருந்துகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை மாவட்டம் முழுவதும் பிரித்து 6 இடங்களில் பொதுமக்களுக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 150 பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று அதிகாலை 5 மணி முதலே பொது மக்கள் பலர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள திரண்டு முண்டியடித்துக் கொண்டு நின்றனர். பல பேர் ஒன்று கூடி நின்றதால் தொற்று பரவும் சூழ்நிலை ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சமூக இடைவெளியை கடைப்பிடித்து நிற்குமாறு கேட்டுக் கொண்டனர். பின்னர் அவர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்து அதன்படி தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Next Story