கொரோனாவுக்கு 13 பேர் பலி


கொரோனாவுக்கு 13 பேர் பலி
x
தினத்தந்தி 2 Jun 2021 2:10 AM IST (Updated: 2 Jun 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு 13 பேர் பலியாகினர்

கரூர்
 தமிழக சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட தகவலின்படி கரூர் மாவட்டத்தில் புதிதாக 406 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 461 பேர் குணமடைந்ததால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இருப்பினும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 13 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று மாலை நிலவரப்படி கரூர் மாவட்டத்தை சேர்ந்த 3,431 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story