கள் விற்ற 3 பேர் கைது


கள் விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 2 Jun 2021 2:15 AM IST (Updated: 2 Jun 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் போலீசாருக்கு ஓலையூர் பகுதியில் பனங்கள் இறக்கி விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அப்போது அங்கு போலீசார் வருவதை கண்டு 2 பேர் தப்பி ஓட முயன்றனர். அதில் ஒருவரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், ஓலையூர் கிராமம் காலனி தெருவை சேர்ந்த சிலம்பரசன்(வயது 32) என்பதும், தப்பியோடியவர் அதே பகுதியை சேர்ந்த ஞானசேகர்(28) என்பதும், பனை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்ததும் தெரியவந்தது. மேலும் அந்த பகுதியில் சோதனை செய்ததில் ஒரு பிளாஸ்டிக் குடத்தில் சுமார் 10 லிட்டர் கள் இருந்தது. இதையடுத்து சிலம்பரசனை கைது செய்து அவரிடம் இருந்த பனங்கள்ளை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய ஞானசேகரை தேடி வருகின்றனர்.
இதேபோல் ஆண்டிமடம் போலீசாருக்கு ஆண்டிமடம் அருகே திருகோணம் பகுதியில் பனைமரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று, 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், புக்குழி கிராமம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த சிலம்பரசன், கடலூர் மாவட்டம் பாசிகுளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா(42) என்பதும், கள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து, பனங்கள்ளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story