அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னும் சுட்டெரிக்கும் வெயில்
அரியலூரில் அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னும் வெயில் சுட்டெரிக்கிறது. அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
அரியலூர்:
அனல் காற்று
அக்னி நட்சத்திரம் முடிந்தும் அரியலூர் நகரில் வெயில் சுட்டெரித்து வருகிறது. காலை 11 மணியில் இருந்து மாலை 5 மணி வரை அனல் காற்றும் வீசுகிறது.
நகரில் உள்ள சாலைகள் அனைத்தும் சிமெண்டு சாலையாக இருப்பதால் வெப்பத்தின் தாக்கம் இருமடங்காக உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். கொரோனா தொற்று பாதிப்பு நகரில் அதிகமாக இருப்பதுடன், சாவு எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
நுங்கு விற்பனை
இதனால் குளிர்சாதன எந்திர(ஏ.சி.) வசதியுடன் உள்ள வீடுகளிலும் குளிர்சாதன எந்திரம் இயக்கப்படுவது இல்லை. மழையும் அதிகமாக பெய்யவில்லை. இதனால் சாலை ஓரங்களில் வெள்ளரி, இளநீர், நுங்கு விற்பனை ஓரளவு நடைபெறுகிறது.
Related Tags :
Next Story