கரூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் யாரும் பாதிக்கப்படவில்லை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
கரூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று அமைச்சர் கூறினார்
கரூர்
கரூர் அரசு பழைய தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 80 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் டி.என்.பி.எல். ஆலையில் 156 ஆக்சிஜன் படுக்கைகள் வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக பூட்டிக்கிடந்த கரூர் அரசு பழைய தலைமை மருத்துவமனை உடனடியாக திறக்கப்பட்டு தற்போது 280 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கருப்பு பூஞ்சை நோய்த் தொற்று பாதிப்பு இல்லை. அவ்வாறு யாராக கண்டறியப்பட்டால் தரமான சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து பள்ளபட்டி இன்டர்நேஷனல் பள்ளியில் 100 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சிகளில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் ஞானக்கன் பிரேம்நிவாஸ், துணை இயக்குனர் சந்தோஷ்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related Tags :
Next Story