வருங்கால வைப்பு நிதி கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் அதிகாரி தகவல்


வருங்கால வைப்பு நிதி கணக்குடன்  ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 2 Jun 2021 3:20 AM IST (Updated: 2 Jun 2021 3:20 AM IST)
t-max-icont-min-icon

வருங்கால வைப்பு நிதி கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று சேலம் உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் நவீன் இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.

சேலம்:
சேலம் உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் நவீன் இம்மானுவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு மாதாந்திர வைப்பு நிதிக்கு ஆன்லைன் மூலம் செலுத்து சீட்டு ரசீது பெறும் நடைமுறை (இ.சி.ஆர்.) பயன்பாட்டில் உள்ளது. இந்த நடைமுறை ஆதார் எண் யு.ஏ.என். உடன் இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருங்கால வைப்பு நிதி சார்ந்த தடையற்ற சேவைகளை பெறவும், சிரமங்களை தவிர்க்கவும் இ.சி.ஆர். தாக்கல் செய்ய வருங்கால வைப்பு நிதியில் பங்களிப்பு செய்யும் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் தொழிலாளர்களும் தங்கள் ஆதார் எண்ணை யு.ஏ.என். உடன் இணைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியின் தடையற்ற சேவைகளை பெற, தங்கள் ஆதாரை நேரடியாக உறுப்பினர் போர்ட்டல் மற்றும் UMANG செயலியில் கிடைக்கும் ஆன்லைன் e-KYC வசதி மூலமாகவோ அல்லது தங்களது உரிமையாளர் மூலமாகவோ இணைக்கலாம். 
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story