எடப்பாடி, கொளத்தூர் பகுதிகளில் 800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


எடப்பாடி, கொளத்தூர் பகுதிகளில் 800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x
தினத்தந்தி 2 Jun 2021 3:43 AM IST (Updated: 2 Jun 2021 3:43 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி, கொளத்தூர் பகுதிகளில் 800 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

இளம்பிள்ளை:
எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி ஆனைப்பள்ளம் பக்கநாடு பகுதியில் சாராயம் காய்ச்ச ஊறல் போடப்பட்டிருப்பதாக பூலாம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து எடப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் உட்ரோ வில்சன், பூலாம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் தலைமையில் போலீசார் பக்கநாடு கல்லூரல் காடு மலைப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது பேரல்களில் 200 லிட்டர் சாராய ஊறல் போடப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் அதனை கீழே ஊற்றி அழித்தனர். தொடர்ந்து பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாராய ஊறல் போட்ட நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதே போல மேட்டூர் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையில் போலீசார் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கத்திரிப்பட்டி, தார் காடு, பண்ணவாடி காவிரிக்கரை ஆகிய பகுதிகளில் சோதனை செய்தனர். அப்போது அங்கு போடப்பட்டிருந்த 600 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்தனர். தொடர்ந்து போலீசார் சாராய ஊறலை போட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story