கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: சேலத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்


கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: சேலத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 2 Jun 2021 4:17 AM IST (Updated: 2 Jun 2021 4:17 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் சேலத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சேலம்:
சேலம் மாநகரில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. சுமார் 100 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக அஸ்தம்பட்டி, மணக்காடு, பெரமனூர், சங்கர் நகர், ரத்தினசாமிபுரம், கிச்சிபாளையம், குகை உள்ளிட்ட பகுதிகளில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் மாநகராட்சி சார்பில் நவீன எந்திரங்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
அதேபோல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய பஸ் நிலையம், அரசு கலைக்கல்லூரி, கொண்டலாம்பட்டி சவுடேஸ்வரி கல்லூரி ஆகிய பகுதிகளிலும் மாநகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கும பணி தினமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் அவ்வப்போது சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story