சேலம் மாநகராட்சியில் களப்பணியாளர்கள் பணிக்கு நேர்முகத்தேர்வு
சேலம் மாநகராட்சியில் களப்பணியாளர்கள் பணிக்கு நேர்முகத்தேர்வு நடைபெற்றது.
சேலம்:
சேலம் மாநகராட்சி பகுதிகளில் கொரோனோ வைரஸ் தொற்று அறிகுறி உள்ளவர்களை வீடு, வீடாக சென்று கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கும் வகையில் களப்பணியாளர்கள் 1,000 பேர் நியமிப்பதற்கான நேர்முகத்தேர்வு நேற்று நடைபெற்றது. அதன்படி சூரமங்கலம் மண்டலத்தில் உள்ளவர்களுக்கு திருவாக்கவுண்டனூர் ஜி.வி.என்.கல்யாண மண்டபத்திலும், அஸ்தம்பட்டி மண்டலத்தில் உள்ளவர்களுக்கு கோட்டை பல்நோக்கு அரங்கிலும், அம்மாபேட்டை மண்டலத்தில் உள்ளவர்களுக்கு வைசியா திருமண மண்டபத்திலும், கொண்டலாம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்டவர்களுக்கு திருச்சி ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்திலும் நடைபெற்றது. அதன்படி அந்தந்த மண்டலத்திற்கு உட்பட்ட மாநகராட்சி உதவி ஆணையாளர்கள் தலைமையில் நேர்முகத்தேர்வு நடைபெற்றது. நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டவர்கள் தகுதியின் அடிப்படையில் களப்பணியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story