தேவூர் பகுதியில் வெண்டைக்காய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
தேவூர் பகுதியில் வெண்டைக்காய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தேவூர்:
தேவூர் அருகே உள்ள அரசிராமணி, குள்ளம்பட்டி, சென்றாயனூர், சோழக்கவுண்டனூர், மேட்டுப்பாளையம் உள்பட பல்வேறு இடங்களில் விவசாயிகள் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளனர். தற்போது வெண்டைக்காய் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் மூலப்பாதை, தண்ணிதாசனூர், ஒக்கிலிப்பட்டி, புள்ளாக்கவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கொள்முதல் மையம் அமைத்து சிண்டிகேட் முறையில் வெண்டைக்காய்களை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து வருகிறார்கள். பின்னர் அதனை கேரள மாநிலத்திற்கு அனுப்பி வருகின்றனர். கடந்த மாதம் வெண்டைக்காய் 1 கிலோ ரூ.5-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். ஆனால் தற்போது விலை உயர்ந்து 1 கிலோ வெண்டைக்காய் ரூ.30-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story