சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்


சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
x
தினத்தந்தி 2 Jun 2021 7:48 AM IST (Updated: 2 Jun 2021 8:35 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.95.99-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல்-டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது. அந்த வகையில் கொரோனாவுக்கு பிறகு தேவை அதிகரித்தது மட்டுமின்றி இந்தியாவில் சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசலுக்கு முறையே 61 சதவீதம் மற்றும் 56 சதவீதம் வரியை மத்திய-மாநில அரசுகள் விதிக்கின்றன. 

இதனால் எரிபொருள் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறது. இந்த சூழலில் சென்னையில் நேற்று பெட்ரோல், ஒரு லிட்டர் ரூ.95.99-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.90.12-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

Next Story