கோயம்பேடு அருகே கூவம் ஆற்றில் சிக்கிய மாட்டை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
கோயம்பேடு அருகே கூவம் ஆற்றில் சிக்கிய மாட்டை தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராடி பத்திரமாக மீட்டனர்.
பூந்தமல்லி,
கோயம்பேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மாட்டு வண்டியில் செடி மற்றும் பூந்தொட்டிகளை தொழிலாளி ஒருவர் விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் அவர், கோயம்பேடு, சின்மயா நகர் பகுதியில் ஓய்வுக்காக வண்டியை நிறுத்திவிட்டு மாட்டை கழற்றி சாலையின் ஓரமாக கட்டுவதற்காக அழைத்துச்சென்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மாடு கோயம்பேடு, சின்மயா நகர் 4-வது மெயின் ரோட்டில் உள்ள கூவத்தில் தவறி விழுந்தது. இதனை கண்டு அதிர்ர்ச்சியடைந்த மாட்டின் உரிமையாளர் அதனை மீட்க எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. உடனடியாக இது குறித்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து கோயம்பேடு தீயணைப்பு நிலைய அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கூவ ஆற்றில் இறங்கி சேற்றில் சிக்கி இருந்த மாட்டை சுமார் 1 மணி நேர போராடி பத்திரமாக மீட்டனர்.
Related Tags :
Next Story