திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 744 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 744 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
திருவள்ளூர்,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்தும் விதமாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவை வருகி்ற 7-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டிருந்தார். இதன் காரணமாக தொற்றின் பாதிப்பானது படிப்படியாக குறைந்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 744 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 2 ஆயிரத்து 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 92 ஆயிரத்து 973 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 7 ஆயிரத்து 683 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1,410 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 26 பேர் இறந்துள்ளனர்.
Related Tags :
Next Story