செங்கல்பட்டு மாவட்டத்தில் சாராயம் விற்ற 3 பேர் கைது
செங்கல்பட்டு மாவட்டத்தில் சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அச்சரப்பாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் ஈ.சி.ஆர்.சாலை ஓதியூர் கிராமத்தில் அதிரடி சாராய வேட்டை நடத்தினர். இதில் ஓதியூர் கிராமத்தை சேர்ந்த விஜயா (வயது44), காமாட்சி (42), கோபு (38) ஆகியோர் தங்கள் வீட்டின் அருகே சாராயம் விற்றது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை செய்யூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோபுவை மதுராந்தகம் கிளை சிறையிலும், விஜயா, காமாட்சி ஆகியோரை சென்னை புழல் சிறையிலும் அடைத்தனர்.
Related Tags :
Next Story