குன்றத்தூரில் டிரைவர், கண்டக்டர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்
குன்றத்தூரில் டிரைவர், கண்டக்டர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம் நடந்தது.
பூந்தமல்லி,
கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் வேளையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. குன்றத்தூர் அரசு பணிமனையில் பணிபுரியும் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் என அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி குன்றத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடந்தது. இதற்கு பேரூராட்சி அதிகாரி முகமது ரிஸ்வான் தலைமை தாங்கினார் இதில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் சமூக இடைவெளியோடு கொரோனா தடுப்பூசியை ஆர்வத்துடன் போட்டு கொண்டனர். இங்கு பணிபுரியும் ஊழியர்கள் வெளி மாவட்டங்களில் இருந்தாலும் அவர்களுக்கும் தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டது. அப்போது அரசு பஸ் பனிமனை மேலாளர் ஞான அருண்குமார் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story