சத்துவாச்சாரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை பணியில் கன்டெய்னர் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு


சத்துவாச்சாரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை பணியில் கன்டெய்னர் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 2 Jun 2021 4:48 PM IST (Updated: 2 Jun 2021 4:48 PM IST)
t-max-icont-min-icon

சத்துவாச்சாரி தேசிய நெடுஞ்சாலையில், சுரங்கப்பாதை பணியில் கன்டெய்னர் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

வேலூர்

சுரங்கப்பாதை அமைக்கும் பணி

வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே ஆர்.டி.ஓ. அலுவலகம் செல்லும் சாலையை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

விறு விறுப்பாக நடந்து வந்த பணி தற்போது ஊரடங்கு காரணமாக மெதுவாக நடைபெற்று வருகிறது. சாலையில் குறுகலான பகுதியில் மட்டுமே வாகனங்கள் சென்று வருகிறது.

நேற்று காலை பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி ராட்சத எந்திரம் ஒன்றை ஏற்றி சென்ற கன்டெய்னர் லாரி கெங்கையம்மன் கோவில் அருகில் வந்தது. சுரங்கப்பாதை பணிக்கு அமைக்கப்பட்டுள்ள கம்பிகளுக்கு இடையில் லாரி திடீரென சிக்கிக் கொண்டது.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் அதன் பின்னால் வந்த லாரிகள், கார்கள், மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்துபாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமார் 30 நிமிடத்திற்கு பிறகு லாரி மீட்கப்பட்டு மெதுவாக சென்றது.
எனவே சுரங்கப்பாதை பணியை விரைந்து முடித்து அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்‌.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மழையின் காரணமாக பள்ளத்தில் தண்ணீர் தேங்கி இருந்தது. அதன்காரணமாக பணி நடைபெறாமல் இருந்தது. தற்போது இன்று (நேற்று) முதல் மீண்டும் பணியை தொடங்கி உள்ளோம் என்றனர்.

Next Story