ஆரணி அருகே குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகை


ஆரணி அருகே குடிநீர் வழங்கக்கோரி  ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகை
x
தினத்தந்தி 2 Jun 2021 5:01 PM IST (Updated: 2 Jun 2021 5:01 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருேக குடிநீா் வழங்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

ஆரணி

குடிநீர் வினியோகம் இல்லை

ஆரணியை அடுத்த சேவூர் ஊராட்சியில் எம்.ஜி.ஆர். நகர் பகுதி உள்ளது. அந்தப் பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை, எனக் கூறப்படுகிறது. 

இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள், வார்டு உறுப்பினரிடம் புகார் செய்தனர். ஆனால் அதற்கு சரியான பதில் கிடைக்காததால் நேற்று மதியம் அப்பகுதியைச் சேர்ந்த பலர் திரண்டு வந்து, எம்.ஜி.ஆர். நகர் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா இல்லாததால், அவரின் கணவர் தரணி விரைந்து வந்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ேபச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர், ஊராட்சியில் தற்போது நிதி இல்லை. நிதி இழப்பீட்டை சரி செய்ய முடியவில்லை. உடனடியாக நிதி ஒழப்பீட்டை சரி செய்து, தங்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கிறேன், எனக் கூறினார். 
அதிகாரி சமரசம்

இதுபற்றி தகவல் அறிந்ததும், ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.வி. மூர்த்தி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர், ஒன்றிய பொது நிதி மூலம் பழுதான குடிநீர் மோட்டாரை சீர் செய்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story