போளூர் பகுதியில் கொரோனா தொற்று கண்டறிய 40 கிராமங்களில் வீடு வீடாக ஆய்வு
போளூர் பகுதியில் கொரோனா தொற்று கண்டறிய 40 கிராமங்களில் வீடு வீடாக ஆய்வு
போளூர்
போளூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 40 கிராமங்களில 40 ஆயிரத்து 346 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராமங்களில் கொரோனா பரவலை தடுக்க வீடுவீடாக சென்று யாரோனும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரா? என ஆய்வு செய்யும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது.
மகளிர் திட்டம் சார்ந்த சமுதாய வள பயிற்றுனர்கள் 240 பேர் 150 குடும்பங்களுக்கு ஒருவர் வீதம் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய பெட்டகம், படிவங்களை வட்டார வள மைய மேலாளர் எழிலரசி, ஒன்றியக் குழு தலைவர் சாந்தி பெருமாள், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தர், உதவி திட்ட அலுவலர் உமாலட்சுமி, ஆணையாளர் பாஸ்கரன் ஆகியோர் வழங்கி ஆய்வுப்பணியை தொடங்கி வைத்தனர். ஆய்வுப்பணியின்போது தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story