கோவில்பட்டியில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றிய 150 பேருக்கு கொரோனா பரிசோதனை


கோவில்பட்டியில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றிய 150 பேருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 2 Jun 2021 6:38 PM IST (Updated: 2 Jun 2021 6:38 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றிய 150 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

கோவில்பட்டி, ஜூன்:
கோவில்பட்டியில் நேற்று ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றிய 150 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

தடுப்பு நடவடிக்கை

கோவில்பட்டியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நகரசபை ஆணையாளர் ராஜாராம், கோவில்பட்டி சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் அனிதா, துணை போலீஸ் சூப்பிரண்டு கலை கதிரவன் ஆகியோர் இணைந்து நேற்று கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கை மீறி வாகனங்களில் ஊர் சுற்றுபவர்களை நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்கும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கும், எட்டயபுரம் ரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு சாமியானா பந்தல் அமைத்து பரிசோதனை நடத்தினார்கள்.

கொரோனா பரிசோதனை

டாக்டர் மனோஜ் தலைமையில் நகரசபை சுகாதார ஆய்வாளர்கள் வள்ளிராஜ், சுரேஷ், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப் இன்ஸ்பெக்டர் மாதவராஜா, மகளிர் காவல் நிலைய போலீசார் மற்றும் சுகாதார பணியளர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். இந்த முகாமில் 150 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. 45 வயதுக்கு மேற்பட்ட 60 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Next Story