ஸ்ரீவைகுண்டம் அருகே 105 வயது முதியவர் மரணம்


ஸ்ரீவைகுண்டம் அருகே 105 வயது முதியவர் மரணம்
x
தினத்தந்தி 2 Jun 2021 6:43 PM IST (Updated: 2 Jun 2021 6:43 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் அருகே 105 வயது முதியவர் ஒருவர் மரணம் அடைந்தார்.

ஸ்ரீவைகுண்டம், ஜூன்:
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தை அடுத்த ராமானுஜம்புதூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாசானம்-மாடத்தி தம்பதியின் மகன் தோத்தாத்ரி ராமானுஜம் (வயது 105). இவர் விவசாயம் செய்து வந்தார். பின்னர் அவர், கடந்த சில ஆண்டுகளாக தன்னை முழுவதுமாக ஆன்மிக பணியில் ஈடுபடுத்திக் கொண்டார். 
வயது முதுமை காரணமாக அவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் மரணம் அடைந்தார். அவரது உடல் அடக்கம் நேற்று நடந்தது.
அவரது மனைவி பேச்சியம்மாள் (90). இந்த தம்பதிக்கு மாசானம், ரெங்கன் ஆகிய 2 மகன்கள், அம்மாபொண்ணு, ரெங்கம்மாள் என்ற 2 மகள்கள் உள்ளனர்.  இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. தோத்தாத்ரி ராமானுஜத்துக்கு 7 பேரன்கள், 8 பேத்திகள், 8 பூட்டன்கள், 6 பூட்டிகள் இருக்கின்றனர்.

Next Story