மனநலம் பாதித்தவருக்கு உதவிய போலீஸ் ஏட்டுக்கு பாராட்டு


மனநலம் பாதித்தவருக்கு உதவிய போலீஸ் ஏட்டுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 2 Jun 2021 9:52 PM IST (Updated: 2 Jun 2021 9:52 PM IST)
t-max-icont-min-icon

வத்தலக்குண்டுவில் மனநலம் பாதித்தவருக்கு உதவிய போலீஸ் ஏட்டுவை டி.ஐ.ஜி. முத்துசாமி பாராட்டினார்.

திண்டுக்கல்:

 வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் முத்துஉடையார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தும்மலப்பட்டி பகுதியில் ரோந்து சென்றார். அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் பசியால் வாடுவதை போலீஸ் ஏட்டு பார்த்தார். மேலும் அந்த முதியவர் சடைமுடி, கிழிந்த ஆடையுடன் இருந்தார்.

இதையடுத்து போலீஸ் ஏட்டு முத்துஉடையார், அந்த முதியவருக்கு முடிவெட்டி விட்டு, குளிக்க வைத்து புதிய ஆடைகளை அணிவித்தார். பின்னர் அவருக்கு உணவு வழங்கி பசியை போக்கினார். மேலும் கணவாய்பட்டி முதியோர் இல்லத்தில் அவரை சேர்த்தார். 

இதையொட்டி போலீஸ் ஏட்டு முத்துஉடையாரை, திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா ஆகியோர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர். மேலும் அவருக்கு வெகுமதியும் வழங்கினர்.

Next Story