சின்னமனூர் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது
சின்னமனூர் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தம்பிரான் ஊத்துமலை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்பேரில் உத்தமபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான போலீசார் தம்பிரான் ஊத்துமலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர்.
இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், பிடிபட்ட 2 பேரும் ஓடைப்பட்டியை சேர்ந்த முருகன் (வயது 52), சேகர் (45) என்பதும், கள்ளச்சாராயம் காய்ச்சி அப்பகுதியில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கள்ளச்சாராயம் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story