கொரோனா பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை; தனியார் மருத்துவமனை ஊழியர் கைது


கொரோனா பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை; தனியார் மருத்துவமனை ஊழியர் கைது
x
தினத்தந்தி 2 Jun 2021 9:52 PM IST (Updated: 2 Jun 2021 9:52 PM IST)
t-max-icont-min-icon

பாலாஜி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகம்,

தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுனில் பாலாஜி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த தனியார் மருத்துவமனையில் அதேப்பகுதியை சேர்ந்த அசோக் பலகி என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். பாலாஜி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த மருத்துவமனையில் கொரோனா பாதித்த பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மருத்துவமனை ஊழியா் அசோக் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இதுகுறித்து தனது உறவினர்களிடம் தெரிவித்தாா். இதுதொடர்பாக அந்த பெண்ணின் உறவினர்கள், அசோக் மீது வித்யாநகர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், அசோக்கை கைது செய்ய தனியார் மருத்துவமனைக்கு வந்தனர். இதனை அறிந்த அசோக் அங்கிருந்து தப்பியோடி விட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் அசோக் ேமாட்டார் ைசக்கிள் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். இதற்காக சிகிச்சை பெறுவதற்காக கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு வந்தார். இதனை அறிந்த போலீசார், ஆஸ்பத்திரிக்கு சென்று அசோக்கை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story