பஸ்சில் சமூக இடைவெளியின்றி பயணிக்கும் அரசு அலுவலர்கள்


பஸ்சில் சமூக இடைவெளியின்றி பயணிக்கும் அரசு அலுவலர்கள்
x
தினத்தந்தி 2 Jun 2021 9:56 PM IST (Updated: 2 Jun 2021 9:56 PM IST)
t-max-icont-min-icon

அரசு பணியாளர்களுக்காக இயக்கப்படும் பஸ்சில் சமூக இடைவெளியின்றி அலுவலர்கள் பயணித்தனர்.

சின்னமனூர்:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பொது போக்குவரத்தும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அரசுத்துறை பணியாளர்களுக்காக காலை மற்றும் மாலை என 2 வேளைகளிலும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 
இந்தநிலையில் தேனி மாவட்டத்தில் அரசு பணியாளர்களுக்காக இயக்கப்படும் பஸ்களில் அலுவலர்கள் சமூக இடைவெளியின்றி கூட்ட நெரிசலுடன் பயணித்து வருகின்றனர். போதிய பஸ்கள் இயக்கப்படாததால் இந்த நெரிசல் ஏற்படுவதாக அலுவலர்கள் தெரிவித்தனர். 
இதுபோன்று சமூக இடைவெளி இன்றி அரசு பணியாளர்கள் பயணிப்பதால், அவர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அரசு பணியாளர்கள் சமூக இடைவெளியுடன் பயணிக்க கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story