ஆற்காடு அருகே கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் கலெக்டர் ஆய்வு
ஆற்காடு அருகே கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் கலெக்டர் ஆய்வு
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இ- பதிவு இல்லாமல் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. மேலும் கிராமப்புறங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆற்காட்டை அடுத்த விளாபாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சித்தா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை நேற்று ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாஸ்டன் புஷ்பராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது ஆற்காடு தாசில்தார் காமாட்சி மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story