கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தன்னலம் கருதா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாவட்ட சமூக நல அலுவலருடன் இணைந்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட அழைக்கப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் https://ucc.uhcitp.in/ngoregistration என்ற இணையதளம் வாயிலாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.
கூடுதல் தகவல்களுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்படும் ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினரான மாவட்ட சமூக நல அலுவலரை 7824928598 என்ற செல்போன் எண்ணிலோ, மாவட்ட மின்னஞ்சல் tnvlrdswo@gmail.com முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story