காரைக்குடி,
காரைக்குடியில் உள்ள புதிய தாய் சேய் மற்றும் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பிரிவிற்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் மருத்துவர்களிடம் சிகிச்சைகளின் தன்மை குறித்தும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும் அவர் கேட்டறிந்தார், மேலும் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு தடையின்றி மருத்துவப்பணிகளை மேற்கொள்ள தேவையான மருத்துவ உபகரணங்கள் இருப்பு உள்ளனவா? என தொடர் கண்காணிப்பில் இருக்கும்படி மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார்.