3,061 பேருக்கு கொரோனா 38 பேர் பலி
3,061 பேருக்கு கொரோனா 38 பேர் பலி
கோவை
கொரோனா தினசரி பாதிப்பில் தமிழக அளவில் கோவை தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. ஆனாலும் தற்போது படிப்படியாக பாதிப்பு குறைந்து வருகிறது. இதற்கிடையே உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக் கை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 76 ஆயிரத்து 910-ஆக உயர்ந்தது.
இதுவரை இல்லாத அளவாக, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 4,488 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 453-ஆக உயர்ந்து உள்ளது.
கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 39 ஆயிரத்து 112 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று ஒரே நாளில் 38 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,345-ஆக உயர்ந்துள்ளது.
முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது.
அதன்படி, 29-ந் தேதி - 3692 பேரும், 30-ந் தேதி - 3,537 பேரும், 31-ந் தேதி - 3,488 பேரும், 1-ந் தேதி - 3,332 பேரும், 2 -ந் தேதி -3,061 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story