கர்நாடக மதுபாட்டில்கள் மினி வேனுடன் பறிமுதல்


கர்நாடக மதுபாட்டில்கள் மினி வேனுடன் பறிமுதல்
x
தினத்தந்தி 2 Jun 2021 10:38 PM IST (Updated: 2 Jun 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

செங்கம் அருகே கர்நாடகத்திலிருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை மினிவேனுடன் போலீசார் மடக்கிப்பிடித்து பறிமுதல் செய்தனர்.

செங்கம்


செங்கம் அருகில் உள்ள மேல்செங்கம் போலீஸ் எல்லைக்குட்பட்ட ஆனந்தவாடி கிராமத்தில் நேற்று போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கர்நாடக மாநில பதிெவண் கொண்ட மினி வேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பெங்களூருவில் இருந்து மதுபானங்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. அந்த மதுபானங்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்ய கடத்தி வந்ததாக மினிவேன் டிரைவர் கூறினார். 

இதையடுத்து 816 கர்நாடக மதுபாட்டில்களை, மினி வேனுடன் பறிமுதல் செய்து மேல்செங்கம் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் கொண்டு வந்தனர். மேலும் மினி வேனை ஓட்டி வந்த டிரைவர் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த அஜித் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story