தொழிலாளியிடம் அரிவாளை காட்டி வழிப்பறி; வாலிபர் கைது


தொழிலாளியிடம் அரிவாளை காட்டி வழிப்பறி; வாலிபர் கைது
x
தினத்தந்தி 2 Jun 2021 10:42 PM IST (Updated: 2 Jun 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் தொழிலாளியிடம் அரிவாளை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி, ஜூன்:
கோவில்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் முருகன் (வயது 45). கூலி தொழிலாளி. இவர் கோவில்பட்டி ஏ.கே. எஸ்.தியேட்டர் ரோட்டில் நடந்து செல்லும் போது 3 வாலிபர்கள் வழிமறித்து, அரிவாளை காட்டி மிரட்டி ரூ.3500 ஐ பறித்துக் கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர்.
இதுதொடர்பாக முருகன் கோவில்பட்டி மேற்கு போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வழிப்பறியில் தொடர்புடைய போஸ் நகரை சேர்ந்த  கணேசன் (வயது 27) என்பவரை கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய சாஸ்திரி நகரை சேர்ந்த மருது பாண்டி, சின்ன ஜமீன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story