காம்பாய்கடை பகுதியில் கொரோனா பரிசோதனை முகாம்
காம்பாய்கடை பகுதியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கொரோனா பரவல் காரணமாக பல இடங்கள் தனிமைபடுத்தப்பட்டு உள்ளன. இங்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தனிமைபடுத்தப்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று தனிமைபடுத்தப்பட்ட காம்பாய் கடை பகுதியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சிவகுமார் தலைமையில் செவிலியர்கள், அங்கு வசிப்பவர்களின் சளி மாதிரியை சேகரித்து, ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் 5 குழுக்களாக பிரிந்து கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில் கொரோனா பரிசோதனை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story