பந்தலூர் அருகே அனுமதியின்றி செயல்பட்ட தனியார் கிளினிக்குக்கு சீல்
பந்தலூர் அருகே அனுமதியின்றி செயல்பட்ட தனியார் கிளினிக்குக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
பந்தலூர்
பந்தலூர் அருகே அனுமதியின்றி செயல்பட்ட தனியார் கிளினிக்குக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
ஆய்வு
பந்தலூர் அருகே எருமாடு சந்திப்பில் தனியார் கிளினிக் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த கிளினிக்கில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் நோயாளிகள் அதிகளவில் கூடுவதாகவும், அனுமதியின்றி உள்நோயாளிகள் அனுமதிக்கப்படுவதாகவும் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்தது.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்படி, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் (குடும்ப நலம்) இரியன் ரவிக்குமார் தலைமையில், வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் கதிரவன், தாசில்தார் தினேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் தனியார் கிளினிக்கிற்கு சென்று ஆய்வு நடத்தினர்.
கிளினிக்குக்கு ‘சீல்’
அப்போது எந்தவித அனுமதியும் இன்றி கிளினிக் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கொரோனா விதிகளை பின்பற்றாமல் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததும் தெரியவந்தது.
இதற்கிடையில், ஆய்வின்போது கிளினிக்கில் இருந்த டாக்டர் மற்றும் அங்கு சிகிச்சைக்கு வந்த பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அறிந்து அங்கு வந்த தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு அமீர் அகமது, சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாகண்ணன், எருமாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து அனுமதியின்றி செயல்பட்ட கிளினிக்குக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
Related Tags :
Next Story