தூத்துக்குடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் நேற்று எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி, ஜூன்:
மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 49 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சம்சுதின் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் உஸ்மான் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் தேசிய குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, தொகுதி, கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story