வேலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்


வேலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 2 Jun 2021 11:05 PM IST (Updated: 2 Jun 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது 7 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளனன. மேலும் 2,500 கோவேக்சின் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. கோவேக்சின் 2-வது டோஸ் போடும் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் (வியாழக்கிழமை) 10 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

வேலூர் மாநகராட்சி பகுதியில் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மெட்ரிக்பள்ளி, வேலூர் ஜெயராம் செட்டித்தெருவில் உள்ள அரிஹந்த் மைதானம், ஊரீசு கல்லூரி வளாகம், காட்பாடி டான்பாஸ்போ மேல்நிலைப்பள்ளி, அணைக்கட்டு ராகவேந்திரா திருமணமண்டபம், வேப்பங்கனேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குடியாத்தம் சந்தைப்பேட்டை சமுதாயகூடம், நெல்லூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குடியாத்தம் பழைய பஸ்நிலையம், பேரணாம்பட்டு முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதைத்தவிர ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனையில் ஆதார் அட்டையுடன் சென்று கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.

இந்த தகவலை வேலூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Next Story