பாப்பிசெட்டிப்பட்டியில் வெளி ஆட்கள் ஊருக்குள் நுழைய தடை


பாப்பிசெட்டிப்பட்டியில் வெளி ஆட்கள் ஊருக்குள் நுழைய தடை
x
தினத்தந்தி 2 Jun 2021 11:40 PM IST (Updated: 2 Jun 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

பாப்பிசெட்டிப்பட்டியில் வெளி ஆட்கள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மொரப்பூர்:
மொரப்பூர் அருகே உள்ள கோபிசெட்டிபாளையம் ஊராட்சி பாப்பிசெட்டிப்பட்டி கிராமத்தில் கொரோனா பரவலை தடுக்க வெளியூர் ஆட்கள் உள்ளே நுழையவும், உள்ளூர் ஆட்கள் வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து கிராமத்தின் நுழைவு பகுதியில் சாலையை முள்வேலிகள் அமைத்து அடைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கிருமி நாசினிகள் கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் வெளியே செல்வது தவிர்க்க வேண்டுமென ஊர் பொதுமக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டது.

Next Story