தம்பிசெட்டிப்பட்டி சேவாகிராம் பஸ் நிறுத்தம் அருகில் புளியமரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு


தம்பிசெட்டிப்பட்டி சேவாகிராம் பஸ் நிறுத்தம் அருகில் புளியமரம்  சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 2 Jun 2021 11:40 PM IST (Updated: 2 Jun 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

தம்பிசெட்டிப்பட்டி சேவாகிராம் பஸ் நிறுத்தம் அருகில் புளியமரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மொரப்பூர்:
மொரப்பூர் அருகே உள்ள தம்பிசெட்டிப்பட்டி சேவாகிராம் பஸ் நிறுத்தம் அருகில் இருந்த பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று சாலையில் நேற்று அதிகாலை அடியோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அரூர்-மொரப்பூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் ஜெயசங்கர், உதவி பொறியாளர் பாஸ்கரன் மற்றும் சாலை பணியாளர்கள் விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் மூலம் சாலையின் குறுக்கே விழுந்த புளியமரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

Next Story