குளித்தலையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத பொதுமக்களால் கொரோனா பரவும் அபாயம்


குளித்தலையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத பொதுமக்களால் கொரோனா பரவும் அபாயம்
x
தினத்தந்தி 2 Jun 2021 6:44 PM GMT (Updated: 2 Jun 2021 6:44 PM GMT)

குளித்தலையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத பொதுமக்களால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குளித்தலை
கொரோனோ ஊரடங்கு காரணமாக குளித்தலை பகுதியில் வீடுதேடி பொதுமக்களுக்கு வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் பலர் தங்கள் பகுதிக்கு வரும் காய்கறி வண்டிகளில் காய்கறிகள் வாங்காமல் தினசரி தரை கடைகள் அமைக்கப்படும் குளித்தலை காவேரி நகர் பகுதியில் காய்கறி விற்கும் வண்டிகளில் காய்கறிகள் வாங்குவதை வழக்கமாக கொண்டு வருகின்றனர். அவ்வாறு வாங்கும் பொதுமக்கள் சமூக‌இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. போலீசார் மற்றும்‌ அரசு அதிகாரிகள் எச்சரித்தாலும். அதனை ஒரு பொருட்டாக பொதுமக்கள் கருதுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது‌ என்ற பாடல் வரிகள் போல், பொதுமக்களே உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் நோய் பரவலை தடுக்க முடியாது என்பதே நிதர்சனமான ஒன்றாகும்.

Next Story