மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க வீடு வீடாக டோக்கன் வினியோகம் தொடக்கம்
பொள்ளாச்சி பகுதியில் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்குவதற்கு வீடு, வீடாக டோக்கன் வினியோகம் தொடங்கியது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பகுதியில் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்குவதற்கு வீடு, வீடாக டோக்கன் வினியோகம் தொடங்கியது.
மளிகை பொருட்கள்
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும், ரூ.4 ஆயிரம் நிவாரண நிதியில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மளிகை, காய்கறி உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் தமிழக அரசு மளிகை பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று அறிவித்தது.
டோக்கன் வினியோகம்
இதை தொடர்ந்து பொள்ளாச்சி வருவாய் கோட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் டோக்கன் வினியோகம் தொடங்கியது. ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கி வருகின்றனர்.
அந்த டோக்கனில் கடை எண், பெயர், அட்டைதாரர் பெயர், கிராமம், தெரு, அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நாள், நேரம் மற்றும் டோக்கன் எண் ஆகியவை குறிப்பிடப்பட்டு உள்ளது.
இது குறித்து வட்ட வழங்கல் அதிகாரிகள் கூறியதாவது:-
2 லட்சம் ரேஷன் கார்டுகள்
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை தாலுகா பகுதிகளில் 389 ரேஷன் கடைகள் உள்ளன.
தமிழக அரசு கோதுமை, ரவை, உப்பு, துணிப்பை, சோப்பு, மிளகாய் தூள், சீரகம், கடுகு, சர்க்கரை, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள் தூள், குளியல் சோப்பு, டீத்தூள், புளி ஆகிய பொருட்கள் கொண்ட தொகுப்பு வழங்க உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி வருவாய் கோட்டத்தில் தகுதி வாய்ந்த 2 லட்சத்து ஆயிரத்து 904 ரேஷன் கார்டுதாரர்களுக்கு மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story