நடமாடும் வாகனத்தில் கிராமங்களில் காய்கறி விற்பனை


நடமாடும் வாகனத்தில் கிராமங்களில் காய்கறி விற்பனை
x
தினத்தந்தி 3 Jun 2021 12:34 AM IST (Updated: 3 Jun 2021 12:34 AM IST)
t-max-icont-min-icon

திருப்புல்லாணி வட்டாரத்தில் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் சார்பில் நடமாடும் வாகனம் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது

ராமநாதபுரம்
திருப்புல்லாணி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் கூட்டுப்பண்ணை திட்டத்தில் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலமாக நடமாடும் காய்கறி வாகனங்கள் கொண்டு பொது மக்களுக்கு காய்கறி விற்பனை செய்யப்படுகிறது. காய்கறி விற்பனையினை ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் டாம் சைலஸ் தொடங்கி வைத்தார். 
திருப்புல்லாணி பகுதியில் களிமண்குண்டு உழவர் உற்பத்தியாளர் குழுவில் இருந்து 2 வாகனங்களிலும், வண்ணாண்குண்டு உழவர் உற்பத்தியாளர் குழுவில் இருந்து ஒரு வாகனத்திலும் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்கள் திருப்புல்லாணி வட்டாரத்தில் அனைத்து கிராமங்களிலும் சென்று காய்கறி, பழங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
சரியான விலைக்கு காய்கறி, பழங்கள் விற்கப்படுகிறதா என திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குனர் அமர்லால், உதவி வேளாண்மை அலுவலர் தவமுருகன், பழனிமுருகன் ஆகியோர் காய்கறி விற்கும் உழவர் உற்பத்தியாளர் குழு வாகனங்களையும், காய்கறிகளின் தரம் குறித்தும் ஆய்வு செய்தனர். 
உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு இந்த காய்கறி விற்பனை ஒரு கூடுதல் வருமானமாக உள்ளது. தங்களது கிராமங்களிலேயே தரமான காய்கறிகள் கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story