கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனை கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனை அதிகமாக நடைபெற்று வருகிறது. இந்த மாம்பழங்களை வாங்கி சாப்பிட்டவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் நிலை உள்ளது.


கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனை கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனை அதிகமாக நடைபெற்று வருகிறது. இந்த மாம்பழங்களை வாங்கி சாப்பிட்டவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் நிலை உள்ளது.
x
தினத்தந்தி 3 Jun 2021 12:34 AM IST (Updated: 3 Jun 2021 12:34 AM IST)
t-max-icont-min-icon

கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனை

ராமநாதபுரம்
கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனை அதிகமாக நடைபெற்று வருகிறது. இந்த மாம்பழங்களை வாங்கி சாப்பிட்டவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் நிலை உள்ளது.
உடல் உபாதைகள்
முக்கனிகளில் ஒன்றான மா, பலா, வாழை ஆகியவற்றில் முக்கிய இடம் பிடித்துள்ள மாம்பழத்தின் சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மாம்பழ விளைச்சல் அதிகமாக உள்ளதால் விற்பனை அதிகமாக நடைபெற்று வருகிறது. இந்த மாம்பழங்கள் காயாக இருக்கும் போதே அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற வியாபார கண்ணோட்டத்தில் குறுக்கு வழியில் அதனை கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்து விற்று வருகின்றனர். இந்த மாம்பழங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக மஞ்சள் நிறத்துடனும், நன்கு பழுத்த பழம் போன்றும் காணப்படுவதால் அதனை காணும் மக்கள் கவர்ந்திழுக்கப்பட்டு நல்ல பழம் என்று நம்பி உடனடியாக வியாபாரிகள் சொன்ன விலைக்கு வாங்கி செல்கின்றனர். இந்த மாம்பழங்களை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு  உருவாகி வருகின்றன. 
ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுபோன்று கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாம்பழங்களை வாங்கி சாப்பிட்டவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு மாம்பழம்தான் காரணம் என்பதை அறியாமல் பாதிக்கப்பட்டவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வாகனங்களில் விற்பனை
இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறும்போது, மாம்பழங்கள் மாமரங்களில் இருக்கும்போதே இயற்கையாக உற்பத்தியாகும் எத்திலின் மூலம் பழுத்துவிடும். மாங்காய்களை வாழைப்பழம், பப்பாளி போன்றவற்றுடன் கலந்து வைத்தால் இயற்கையாகவே எத்திலின் சுரந்து பழுத்து விடும். ஆனால், வியாபார நோக்கத்தில் காயாக இருக்கும் போதே அதனை பறித்து வந்து செயற்கையாக பழுக்க வைத்து விற்பனை செய்கின்றனர். இந்த பழங்களை வாங்கி உண்பதால் வயிற்றில் புண், வாந்தி, மயக்கம், உயர் ரத்த அழுத்தம், வயிற்று போக்கு ஏற்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. கல் வைத்த மாம்பழங்களை விற்பனை செய்ய தடைவிதித்துள்ளது என்றார். 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் வாகனங்களில் சர்வ சாதாரணமாக வியாபாரிகள் கல் வைத்த மாம்பழங்களை விற்க எடுத்து வருகின்றனர். இதனை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story